காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரருக்கு தங்கம்!

ஆஸ்திரேலியாவல் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றுள்ளார்.
 | 

காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரருக்கு தங்கம்!

காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரருக்கு தங்கம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 77 கிலோ ஆடவர் எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் அவர் இன்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். மொத்தமாக இவர் 317 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

சதீஷ்குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்.  கடந்த 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியிலும் இவர் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தியா, காமன்வெல்த் போட்டியில் 3வது இடம் பெற்றுள்ளது. மொத்தமாக 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. 

தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கள்]பதக்கம் பெற்றதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மேலும் வேலூரில் உள்ள அவரது பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களின் பேட்டியின் போது சதீஷ்குமாரின் தந்தை, "தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், வேலூர் மாவட்டத்திற்கும், எங்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் சதீஷ்குமார். மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். அவர் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அது நடந்துவிட்டது" என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP