வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிரிஸ்டன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட உள்ளார்.
 | 

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிரிஸ்டன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிரிஸ்டன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட உள்ளார். 

முன்னாள் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் கேரி கிரிஸ்டன், 2011ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்பதை மறந்திருக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல் போட்டி முடிந்ததும் இவர் வங்கதேசம் செல்ல இருக்கிறார். ஏனெனில், வங்கதேசம், கிரிஸ்டனை தங்களது தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே கிரிஸ்டனின் நியமனத்தை உறுதி செய்துவிட்டோம். அந்த முடிவு இறுதி கட்டத்தில் இருக்கிறது. அவர் எங்களுக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இதுதவிர, வங்கதேச அணிக்கு ஏந்ததந்த பயிற்சியாளர்கள் பொருந்துவார்கள் என்ற பட்டியலும் அவர் பரிந்துரை செய்ய இருக்கிறார். நாங்களும் ஒரு பட்டியலை வைத்துள்ளோம். இது குறித்து அவரும், பிசிபி-யும் சேர்ந்தது முடிவெடுக்கும்." என்றார்.   

இலங்கை பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசிங்கா, வங்கதேச அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அந்த அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்யும் முனைப்பில் வங்கதேசம் உள்ளது. பயிற்சியாளரை தேர்வு செய்யும் பட்டியலில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஜூன் 6ம் தேதியில் இருந்து வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இப்போட்டிற்குள் பயிற்சியாளரை வங்கதேசம் தேர்வு செய்ய உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP