விராட் கோலிக்கு கேல் ரத்னா!: தேசிய விருது பெறுவோரின் பட்டியல்

விராட் கோலி மற்றும் மீராபாய் சானுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருதும், 8 பேருக்கு துரோணாச்சாரியா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

விராட் கோலிக்கு கேல் ரத்னா!: தேசிய விருது பெறுவோரின் பட்டியல்

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு. 

ஆண்டுதோறும் மத்திய அரசு விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கவும் விளையாட்டுத் துறையால், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

இந்நிலையில், 2018 ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை பெறும் வீரர்-வீராங்கனைகள் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

விராட் கோலிக்கு கேல் ரத்னா!: தேசிய விருது பெறுவோரின் பட்டியல்

விராட் கோலி மற்றும் மீராபாய் சானுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது. 

சுபேதர் செனாந்தா அச்சையா குட்டப்பா, விஜய் சர்மா, ஸ்ரீனிவாச ராவ், சுக்தேவ் சிங் பன்னு, கிளாரன்ஸ் லோபோ, தாரக் சின்ஹா, ஜீவன்குமார் சர்மா, பீடு ஆடிய 8 பேருக்கு துரோணாச்சாரியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

► மூன்று விளையாட்டு நிறுவனங்களுக்கு ராஷ்ட்ரிய கேள் புரொடஸ்ஹான் புருஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது.

► சத்யதேவ் பிரசாத் (வில்வித்தை), பாரத் குமார் சேத்ரி (ஹாக்கி), பாபி அலாசியஸ் (தடகளம்), சோளகலே தாது தத்தாத்ரே (மல்யுத்தம்) ஆகியோருக்கு தயான் சந்த் விருது வாழங்கப்படுகிறது. 

விராட் கோலிக்கு கேல் ரத்னா!: தேசிய விருது பெறுவோரின் பட்டியல்

நீரஜ் சோப்ரா (தடகளம்); ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்); சிக்கி ரெட்டி (பேட்மின்டன்); சதிஷ் குமார் (குத்துச்சண்டை); ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்); ஷுபன்கர் சர்மா (கோல்ப்); மன்ப்ரீத் சிங் (ஹாக்கி); சவிதா (ஹாக்கி); ரவி ராதோர் (போலோ); ராஹி சார்னோபாத் (துப்பாக்கிச் சுடுதல்); அன்குர் மிட்டல் (துப்பாக்கிச் சுடுதல்); ஷ்ரேயாஷி சிங் (துப்பாக்கிச் சுடுதல்); மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்); சத்யன் (டேபிள் டென்னிஸ்); ரோஹன் போபண்ணா (டென்னிஸ்); சுமித் (மல்யுத்தம்); பூஜா கடியேன் (வ்யூஷு); அன்குர் தாமா (பாரா- தடகளம்); மனோஜ் சர்க்கார் (பாரா- பேட்மின்டன்) ஆகிய 20 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP