காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்!

காமன்வெல்த் போட்டியில் இந்தியா நான்காவது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
 | 

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்!

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்!

காமன்வெல்த் போட்டியில் இந்தியா நான்காவது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர்- வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்து வருகின்றனர். இன்று நடந்த ஆண்களுக்கு பளுதூக்குதல் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் தீபக் லேதர், 162 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலம் வென்றார். வேல்ஸின் கிறிஸ் எவன்ஸ் தங்கம் மற்றும் இலங்கையின் திஸ்ஸநாயகே முடியான்செலகே வெள்ளி வென்றார். 

பெண்கள் ஹாக்கி போட்டியில், ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா- மலேஷியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் மலேஷியாவை வீழ்த்தியது. 

குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நமன் தன்வார் காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் விக்ரம் மல்ஹோத்ரா, ஸ்குவாஷ் போட்டியின் 16-வது சுற்றில் 6-11, 11-8, 6-11, 6-11 என்ற கணக்கில் இங்கிலாந்தின் நிக் மேத்தியுவிடம் தோல்வி அடைந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP