ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்!

பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
 | 

ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்!

ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் வீரர் நிக்கி லவுடா ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1975ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 

கடந்த 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி ஜெர்மனியில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியில் கலந்துகொண்ட போது நிக்கி லவுடாவின் கார் தீ பிடித்து எரிந்தது. இதில், நிக்கி லவுடாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவினாலும் அவர் பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். 

பின்னர், 1977, 1984ம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலமாக ஹாட்ரிக் சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அவரது மறைவுக்கு ஆஸ்திரிய நாட்டினர் மட்டுமில்லாது உலகம் முழுவதுமுள்ள வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP