ஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு முன்னாள் இந்திய வீரர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 | 

முன்னாள் இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புத்(56), ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்காக அடுத்த மாதம் (ஜூன்) ராஜ்புட், ஜிம்பாப்வே செல்ல உள்ளார். ஜூன் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு அவர் பயிற்சியாளராக தொடர்வார். 

1985 முதல் 1987ம் வருடம் வரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் லால்சந்த் ராஜ்புட் விளையாடியுள்ளார். 2007ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியின் மேலாளராக இருந்தார். 2016-2017ல் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். 

"ஆப்கானிஸ்தான், டெஸ்ட் அந்தஸ்து பெறும் அணியாக உயர்த்த செயல்பட்டது போல், ஜிம்பாப்வேவின் உயர்வுக்கு பாடுபடுவேன். ஜிம்பாப்வே அணியை சிறப்பான அணியாக உருவாக்க என்னால் முடியும் என்று நம்புகிறேன்" என்று ராஜ்புட் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP