முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் முதல் பிளேஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
 | 

முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?

முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் முதல் பிளேஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 

ஐபிஎல் 2018 இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இன்று முதல் பிளேஆப் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இன்று நடக்கும் முதல் குவாலிபையர் சுற்றில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியா க இறுதிச்சுற்றுக்கு தகுதி பெரும். தோல்வியடையும் அணி இரண்டாவது குவாலிபையர் சுற்றில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றியடையும் அணியுடன் மோதும். தற்போது இந்த இரண்டு அணிகளும் 9 வெற்றிகளுடன் முதல் 2 இடத்தில் உள்ளன. 

முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?இந்தாண்டு ஐபிஎல் தொடக்கத்தில் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த வார்னர் கலந்து கொள்ளமாட்டர் என்ற செய்தி அந்த அணிக்கு பெரும் இடியாக விழுந்தது. அதன் பின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கேன் வில்லியம்சன் அந்த  அணியை வெற்றிப்பாதையில் பயணிக்க செய்தார். நடப்பாண்டில் மிகவும் வெற்றிகரமான அணியாக ஐதராபாத் திகழ்கிறது. மேலும் முதலில் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையையும் ஐதராபாத் பெற்றுள்ளது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது ஐதராபாத். ஐபிஎல் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்று பலரும் நினைத்திருந்த நிலையில் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு அசத்தியது இந்த அணி. 130 ரன்கள் எடுத்தாலும் எதிரணியை 100 ரன்களுக்குள் சுருட்டி ஆச்சர்யபடுத்தினர் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள். 

ஆனால் கடந்த 4 போட்டிகளில் எதிரணிக்கு 180 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து அதில் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது அந்த அணி. நிலையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த தவறிவிட்டதும், அந்த அணியின் பந்துவீச்சாளர்களை மற்ற அணி வீரர்கள் எளிதாக எதிர்கொள்ள தொடங்கி விட்டதும் தான் தொடர் தோல்விகளுக்கு காரணம். 

எனவே இன்றைய போட்டியில் தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஐதராபாத் அணி. முக்கியமாக இந்த சீசன் லீக் போட்டிகளில் சென்னையை எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வி அடைந்து விட்டது. எனவே சென்னையை பழிவாங்கவும் அந்த அணிக்கு இன்றைய வெற்றி மிக முக்கியமானது. 

முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்கம் முதல் ஈசியான போட்டியைக்கூட கடினமாக்கி கடைசி ஓவரில் வெற்றி பெற்று வந்துள்ளது. எப்போதும் போல இந்தாண்டும் சென்னை அணிதான் எல்லா அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு சென்னையிடம் மற்ற 7 அணிகளும் தோல்வியை சந்தித்து உள்ளன. எனவே அந்த நம்பிக்கையுடன் தான் இன்றைய போட்டியையும் அந்த அணி எதிர்கொள்ளும். 

சென்னை அணிக்கு பெரும் தலைவலியாக இருந்த பந்துவீச்சிலும் அந்த அணி வீரர்கள் முன்னேற்றத்தை காட்ட துவங்கி விட்டனர். கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தீபக் சாஹர், லுங்கிசானி நிகிடி, ஷர்துல் தாகூர் என இளம் வீரர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை பதம்பார்த்தனர். 

ஆனால் பிரவோவுக்கு மட்டும் கடந்த சில போட்டிகள் சரியாக அமையவில்லை. டெத் ஓவர் கில்லாடியான பிரவோ சொதப்பல் இந்த போட்டியிலும் தொடராமல் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்களின் டீம் சென்னை சூப்பர் கிங்ஸ் எனலாம். தொடக்க ஆட்டக்காரர் ரஹானே முதல் ஹர்பஜன் சிங் வரை ஹிட்டர்ஸ்கள் உள்ள அணி. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் தீபக் சாஹர் களமிறங்கி சிக்சர்கள் பறக்கவிட்டது அந்த அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் சாம்பில்லிங்ஸ் நீக்கப்பட்ட கடந்த போட்டியில் ஓய்வெடுத்த ஷேன் வாட்சன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மொத்தமாக ஒரு அணியாக சிறந்த நிலையில் உள்ள சென்னை அணியை எதிர்கொள்வது ஐதராபாத் அணிக்கு கடினமான ஒன்றாக தான் இருக்கும். 

ஐதராபாத் அணியின் மொத்த ரன்களில் 30 சதவீத ரன்களை அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் எடுத்துள்ளார். எனவே கேன்னின் விக்கெட்டை முதலிலேயே எடுக்கவில்லை என்றால் அவர் களத்தில் இருக்க இருக்க  அது சென்னை அணிக்கு பாதகமாகி விடும்.

முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?ஐதரபாத்தின் புவனேஷ்வர் குமாரும் ரஷித்தும் மற்ற பேட்ஸ்மேன்களை தங்களது பந்துவீச்சால் மிரட்டினாலும் தோனியையும் ரஹானேவையும் மட்டும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இந்தாண்டு புவனேஷ்வர் குமார் ஓவர்களில் தோனியின் ஸ்டைரக் ரேட் 185ஆக உள்ளது. ரஹானே தனது முதல் ஐபிஎல் சதத்தை சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட ஐதராபாத் அணிக்கு எதிராக தான் எடுத்துள்ளார். குறிப்பாக ரஷித்கான் ஓவர்களில் சிக்சர்கள் பறக்கவிடுவது ரஹானேவின் சிறப்பு. 

முதல் பிளேஆப் போட்டி: மீண்டும் ஐதராபாத்தை மிரட்டுமா தோனி அன்ட் கோ?முப்பை வான்கடே மைதனாத்தில் இன்று 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை ஐதராபாத் விளையாடிய 4 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 6 போட்டிகளில் 5ல் வென்றுள்ளது. ஆனால் இந்தாண்டு இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் மும்பையை எதிர்த்து விளையாடிய போட்டிகளில் வென்றுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP