ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள்... சூடாக பதிலளித்த வினய்குமார்

விளையாட்டில் சில நேரங்கள் தவறுகள் நடக்க தான் செய்யும் என்று ட்விட்டரில் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்க கொல்கத்தா அணி வீரர் வினய் குமார் பதிலளித்துள்ளார்.
 | 

ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள்... சூடாக பதிலளித்த வினய்குமார்

ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள்... சூடாக பதிலளித்த வினய்குமார்விளையாட்டில் சில நேரங்கள் தவறுகள் நடக்க தான் செய்யும் என்று ட்விட்டரில் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்க கொல்கத்தா அணி வீரர் வினய் குமார் பதிலளித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதினர். இதில் கடைசி கட்டம் வரை எந்த அணி வெற்றி பெரும் என்று கணிக்க முடியாதப்படி மிக விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெரும் என்ற நிலையில் பந்துவீச வந்தார் கொல்கத்தாவின் வினய் குமார். அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ஓரு நோபால் மற்றும் ஒரு அகலபந்தும் அடங்கும். வினய் குமாரின் மோசமான பந்து வீச்சு தான் சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்று கொல்கத்தா அணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இந்த ஐபிஎல் சீசனில் வினய் குமார் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 14, 16, 16, 19 என எதிரணிக ரன்களை வாரி வழங்கியுள்ளார். 

எனவே ஐபிஎல் ரசிகர்கள் வினய்குமாரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் வினய் குமார் பதிவிட்டுள்ளார். 

அதில், "இதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். இது வெறும் விளையாட்டு தான். நான் பெங்களுர் அணிக்கெதிராக 9 ரன்களையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 10 ரன்களையும் சுலபமாக கையாண்டபோது நீங்கள் எல்லாம் எங்கு சென்றீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP