தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது: தோனி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
 | 

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது: தோனி

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது: தோனிகொல்கத்தா  அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 177 ரன்கள் எடுத்தது. 

அதன் பின் களமிங்கிய கொல்கத்தா அணி 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சும் ஃபீல்டிங்கும் கொல்கத்தா அணிக்கு எதிராக எடுபடவில்லை. 

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது: தோனிஇந்நிலையில் தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக நேற்றைய தோல்விக்கு பின் சென்னை அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, மைதானத்தின் தன்மை ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மாறிவிட்டது. விளக்குகளுக்கு கீழ் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. மொத்தமாக தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக தான் உள்ளது. அதிலும் எங்களது பந்துவீச்சாளர்களின் பவுளிங்கில் நிச்சயம் முன்னேற்றம் வேண்டும். எங்கள் அணியின் ஃபீல்டிங் பற்றி எனக்கு தெரியும். இன்று மைதானத்தில் அவர்கள் சரியான கவனத்துடன் இல்லை என்று தான் கூறுவேன். சிறந்த ஃபீல்டருக்கு உதாரணம் மைக் ஹஸ்ஸி. அவர் சென்னை அணிக்காக விளையாடிய போது பந்தின் தன்மையை உணர்ந்து ஃபீல்டிங் செய்வார். எந்த பந்துவீச்சாளரும் சரியாக பவுளிங் செய்யவில்லை என்றால் இருக்கும் எல்லா பவுளர்களையும் மாற்றி, மாற்றி பயன்படுத்த வேண்டும். அப்போதும் அவர்கள் சரியாக செயல்படவில்லை எனும்போது ஆட்டம் முடிந்து விடும். பவுளர்கள் இன்னும் பந்தின் லைன் அன்ட் லென்ந்தில் கவனம் செலுத்த வேண்டும். பேட்ஸ்மேன்களின் பலம் பலவீனம் குறித்து அறிந்து செயல்பட வேண்டும். பந்துவீச்சாளர்களிடம் நாம் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அவர்கள் பந்து வீசும் போது அவர்கள் முடிவு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP