பில்லிங்ஸால் தான் டு பிளேஸிஸ் அணிக்குள் வந்தார்- பயிற்சியாளர் ஃபிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச் சுற்றுக்கு செல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தது டு பிளேஸிஸ்.
 | 

பில்லிங்ஸால் தான் டு பிளேஸிஸ் அணிக்குள் வந்தார்- பயிற்சியாளர் ஃபிளெமிங்

பில்லிங்ஸால் தான் டு பிளேஸிஸ் அணிக்குள் வந்தார்- பயிற்சியாளர் ஃபிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச் சுற்றுக்கு செல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தது டு பிளேஸிஸ். 42 பந்துகளில் 67 ரன் அடித்து சென்னை அணி, தனது ஏழாவது இறுதிச் சுற்றை எட்ட உதவினார். ஆனால், இந்த போட்டியில் டு பிளேஸிஸ் இடம் பெற்றதே ஒரு விபத்து தான் என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். 

சி.எஸ்.கே வெற்றி குறித்து பேசிய ஃபிளெமிங், "சாம் பில்லிங்ஸுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் தான் பாப் டு பிளேஸிஸ் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டியில் அவர் செயல்பட்ட விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். பாப், பல போட்டிகளில் விளையாடாமல், தொடரின் முக்கிய ஆட்டத்தில் அவர் செயல்பட்ட விதம், அவருடைய திறன் மற்றும் மனநிலை சிறப்பாக இருந்ததை வெளிக்காட்டியது. 

சில நேரங்களில் ஊமையான அதிர்ஷ்டம் கிட்டும். நாம் ஒரு வீரரை, சரியான நேரத்தில் வெறுமென தேர்வு செய்வோம். அவர் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார். அது தான் இன்று நடந்துள்ளது. பில்லிங்ஸின் காயம் ஒன்றை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. டு பிளேஸிஸ் துவக்க வீரராகவும், ராயுடு 4-வது வரிசையிலும் இறங்க வேண்டுமென்பதே அது" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP