ஓருவர் மீது மட்டும் பொறுப்பை இறக்கி வைக்க கூடாது: கோலி

எல்லா நேரத்திலும் ஒருவர் மீது மட்டும் பொறுப்பை இறக்கி வைக்க கூடாது என்று தோல்விக்கு பின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 | 

ஓருவர் மீது மட்டும் பொறுப்பை இறக்கி வைக்க கூடாது: கோலி

ஓருவர் மீது மட்டும் பொறுப்பை இறக்கி வைக்க கூடாது: கோலிஎல்லா நேரத்திலும் ஒருவர் மீது மட்டும் பொறுப்பை இறக்கி வைக்க கூடாது என்று தோல்விக்கு பின் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதில் பெங்களூரு அணி ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து பிளேஆப் வாய்ப்பை நழுவவிட்டது. 

இந்த தோல்விக்கு பின்பேசிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ''இது விசித்திரமான போட்டியாக இருந்தது. ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆனால் அடுத்தடுத்து எங்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போய்விட்டது. இது நிச்சயம் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று தான். ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. ஏ.பி.டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க விலலை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலாக செயல்பட்டனர். ஆனால் சில அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போதும் டிவில்லியர்சே கைகொடுப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும். அவர் முடிந்த அளவு ரன்கள் சேர்த்தார். இந்த தொடரில் சில புதிய வீரர்கள் நன்றாக செயல்பட்டார்கள். புதிய பந்தில் உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினார். சாஹல், சிராஜ், மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. அடுத்த தொடரில் வலுவாக திரும்பி வருவோம். பிளே ஆப் சென்ற மற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள். என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP