இப்போ இந்த ஆரஞ்சு கேப் தேவையா?- புலம்பித்தள்ளிய கோலி

வெற்றி, தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால், இந்தியாவின் ஆக்ரோஷ கேப்டன், வெற்றி மட்டுமே முடிவாக இருக்க வேண்டும் என்று விரும்புபவார். அதிலும் சிறப்பாக செயல்பட்டு, அதற்கு பரிசு கிடைத்தும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அந்த வேதனையை எங்கு போய் சொல்வது..
 | 

மும்பையின் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கடந்த செவ்வாய்கிழமை களமிறங்கினர். முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 213 ரன் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 94 ரன் எடுத்து வெற்றிக்கான ஸ்கோரை கொடுத்தார். 

பின்னர் களம் கண்ட பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, 92 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்று போராடினார். ஆனால் அவரின் போராட்டம் அனைத்தும் பயனற்றுப் போனது. இதனால் மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

அணிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், அணி கேப்டனுக்கு அவரது ஸ்கோர் ஆரஞ்சு தொப்பியை பரிசாக கொடுத்தது. இந்த சீசன் ஐ.பி.எல்-ல் விராட் விளையாடிய நான்கு போட்டிகளில் மொத்தம் 201 ரன் அடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டியில் டாப் ஸ்கோரை பதிவு செய்ததால் விராட்டிற்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது.

இப்போ இந்த ஆரஞ்சு கேப் தேவையா?- புலம்பித்தள்ளிய கோலி

மேலும், போட்டியில் 92 ரன் அடித்ததன் மூலம், 4619 ஸ்கோருடன் ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட். 

ஆரஞ்சு தொப்பி வாங்கிய பின் பேட்டி அளித்த விராட், "இப்போது இந்த ஆரஞ்சு தொப்பியை அணிய எனக்கு தோணவில்லை. இந்த நேரத்தில் இது ஒரு பெரிய விஷயமில்லை. இந்த நாளில் நாங்கள் போதுமான அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை" என்றார்.

"போட்டியில் நடந்தவை எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இன்னும் 20-30 ரன்கள் அவர்கள் குறைவாக எடுத்திருந்தால், போட்டியில் பெரிய மாற்றம் உண்டாகியிருக்கும். மும்பை அணி சிறப்பாக செயல்பட்டது. பந்துவீச்சில் மும்பை உயர்ந்த இடத்தில் இருக்கிறது" என்று பெங்களூரு பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்தார். 

2008ம் ஆண்டு ஐ.பி.எல் அறிமுகமான சீசனில் இருந்து பெங்களூரு அணிக்காக கோலி விளையாடி வருகிறார். வெட்டோரிக்குப் பிறகு ஆர்.சி.பி அணியின் கேப்டன் ஆனார். அதன்பிறகுதான் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆனார். இந்திய அணியை திறம்பட வழிநடத்தி, பல சாதனைகளை படைத்த கேப்டன் விராட் கோலியால் ஐ.பி.எல்-ல் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது மிகப்பெரிய சோகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த சீசனில் ஒரு வெற்றியுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதே இந்த புலம்பலுக்கு காரணம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP