உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்றார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், கடந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர் என்ற லாரியஸ் விருதை பெற்றுள்ளார்.
 | 

உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்றார் ஜோகோவிச்!

2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், கடந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர் என்ற லாரியஸ் விருதை பெற்றுள்ளார்.

நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச், காயம் காரணமாக 2017ம் ஆண்டில் ஓய்வு பெற்று, பின்னர் மீண்டு வந்து கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்களை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர், ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் முழு ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் லாரியஸ் விருது விழாவில், ஜோகோவிச்சுக்கு சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர் என்ற விருது வழங்கப்பட்டது. கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த பிரபல வீரர் ம்பாப்பே, குரேஷிய கால்பந்து வீரர் மாட்ரிச், ஃபார்முலா ஒன் ரேஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், கென்ய மாரத்தான் சாதனையாளர் கிப்சோகே ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யபட்டிருந்தனர். 

விருதை பெற்ற பின் பேசிய ஜோகோவிச், "ஒவ்வொரு விளையாட்டு வீரரும் வெல்ல வேண்டும் என ஆசைப்படும் இந்த லாரியஸ் விருது எனக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. விளையாட்டின் ஜாம்பவன்கள் மத்தியில் இன்று நிற்பது மேலும் சிறப்பு" என்றார். 2012, 2015, 2016ம் ஆண்டுகளுக்கு பிறகு, ஜோகோவிச் வெல்லும் 4வது லாரியஸ் விருது இதுவாகும்.

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP