ஆப்கானிஸ்தானுக்கு அவமரியாதை: விராட்டை விரட்டும் பிசிசிஐ

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், முதன்முறையாக விளையாடும் டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்துகின்றது. ஜூன் 14ம் தேதி இரு அணிகள் விளையாடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழி நடத்த விராட் கோலி இருக்க மாட்டார் என்ற செய்தி வெளியானது.
 | 

ஆப்கானிஸ்தானின் இந்திய சுற்றுப்பயணம் முடிவடைந்த பின், இந்தியா, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருவதால், அங்கு நடக்கும் உள்ளூர் போட்டியான கவுன்டி கிரிக்கெட்டில் பங்கேற்க விராட் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வரும் ஆப்கானிஸ்தானை விராட் புறக்கணிக்க முடிவு செய்தார். 

இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்துள்ள பிசிசிஐ விராட்டின் இந்த செயல், ஆப்கானிஸ்தானை அவமரியாதை செய்வது போன்றது என கருத்து தெரிவித்துள்ளது. 

இது குறித்து பிசிசிஐ தரப்பில், "இந்திய கேப்டனை சர்வதேச போட்டியில் இருந்து விலக்கி, உள்ளூர் போட்டியான கவுன்டி கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்தால், அது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இது ஆப்கானிஸ்தானுக்கு நாங்கள் கொடுக்கும் கெட்ட செய்தியாகும். தவிர, ஆப்கானிஸ்தான் அணியை நாம் அவமரியாதை செய்வது போல் ஆகிவிடும். அது மட்டுமின்றி ஒளிப்பரப்பு நிறுவனத்துக்கு நியாயமற்ற செயலை செய்தது போலாகும். போட்டியின் போது இங்கிலாந்து மண்ணில் அவர் விளையாடிக் கொண்டிருந்தால், அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் பங்கேற்க இந்தியா வரவேண்டும். அதன் பின் அவர் இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்லலாம். கவுன்டி போட்டியில் விளையாட விராட் அத்தனை முனைப்புடன் இருந்தால், ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதற்கான அனுமதியை பெற முயற்சித்தாரா?" என்று கேட்டுள்ளது. 

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட நினைக்கும் விராட், வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதைப் படிச்சீங்களா...

கோலி Vs தோனி: யார் சிறந்த கேப்டன்?

தியா - திரை விமர்சனம்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP