கடைசி நேரத்தில் சொதப்புவதே தொடர்கதையாகிவிட்டது: தினேஷ் கார்த்திக்

தங்கள் அணி கடைசி 2 ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்புவதே தொடர்கதையாகி விட்டதா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின் தினேஷ் கார்த்திக் கூறினார்.
 | 

கடைசி நேரத்தில் சொதப்புவதே தொடர்கதையாகிவிட்டது: தினேஷ் கார்த்திக்

கடைசி நேரத்தில் சொதப்புவதே தொடர்கதையாகிவிட்டது: தினேஷ் கார்த்திக்தங்கள் அணி கடைசி 2 ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்புவதே தொடர்கதையாகி விட்டதா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின் தினேஷ் கார்த்திக் கூறினார்.

ஐபிஎல் தொடரில் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. உத்தப, கிறிஸ் லின் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.

கடைசி நேரத்தில் சொதப்புவதே தொடர்கதையாகிவிட்டது: தினேஷ் கார்த்திக்192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது கெய்ல் 49 ரன்னுடனும், கேஎல் ராகுல் 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் மழை நின்றதும் சுமார் 8.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லிவிஸ் விதிப்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 13 ஓவரில் 125 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏற்கனவே 8.2 ஓவர்கள் விளையாடிவிட்டதால், 28 பந்தில் 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்களுடனும், அகர்வால் 2 பந்தில் 2 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

கடைசி நேரத்தில் சொதப்புவதே தொடர்கதையாகிவிட்டது: தினேஷ் கார்த்திக்தோல்விக்கு பின் பேசிய கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், எதிரணி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடினர். நாங்கள் கடைசி இரண்டு ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்புவது தொடர்கதையாகி விட்டது. ஆட்டத்தை சரியாக முடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. எங்களது திட்டத்தை நாங்கள் சரியாக செயல்ப்படுத்தவில்லை. ராகுல் மற்றும் கெயில் அபாரமாக விளையாடினர் என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP