பெங்களூரு அணி கடைசியாக சென்னையை வீழ்த்தியது எப்போ தெரியுமா?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடைசியாக 4 வருடங்களுக்கு முன் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 | 

பெங்களூரு அணி கடைசியாக சென்னையை வீழ்த்தியது எப்போ தெரியுமா?

பெங்களூரு அணி கடைசியாக சென்னையை வீழ்த்தியது எப்போ தெரியுமா?பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடைசியாக 4 வருடங்களுக்கு முன் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் என பல சிறந்த வீரர்களை வைத்திருக்கும் பெங்களூரு அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கைப்பற்றவில்லை. ஆனால் தொடர்ந்து எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக அமைந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ளும் போட்டியை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள. கோலி அணியும் தோனி அணியும் மோதிகொள்ளும் போட்டி என்று இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க துவங்கி விட்டனர். 

என்னதான் சிறந்த வீரர்களை வைத்திருந்தாலும் பெங்களூரு அணி தொடர்ந்து சென்னை அணியிடம் தோல்வி அடைந்து வருகிறது. கடைசியாக 2014ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த போட்டியில் தான் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியது. அதன் பின் ஆடிய அனைத்து போட்டிகளிலும் சென்னை அணியின் கையே ஓங்கி இருந்தது. 

நேற்றைய போட்டிகளையும் சேர்ந்து தோல்வியையும் சேர்ந்து ஆர்சிபி அணி தொடர்ந்து 6 முறை சென்னையிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்தாண்டு அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால் அடுத்த ஆண்டு ஐபிஎல்போட்டியில் தான் சென்னை அணியுடன் மோதும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP