எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

மோசமான ஃபீல்டிங், சொதப்பிய பவுளர்கள்... எடுப்படாத தோனியின் கேப்டன்சி என நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.
 | 

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

மோசமான ஃபீல்டிங், சொதப்பிய பந்து வீச்சாளர்கள்... எடுப்படாத தோனியின் கேப்டன்சி என நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்விடைந்தது. ஒரு மேட்சில் தோல்வி அடைந்தவிட்டதால் எழுந்த விமர்சனம் என்றோ, தோனி மீதான வெறுப்போ என்று கருத வேண்டாம். கொல்கத்தா அணியுடனான சென்னை அணியின் ஆட்டம் பற்றிய ஒரு அலசல் மட்டுமே...

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 3ம் தேதி (வியாழன்) நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றியடைந்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று கொல்கத்தா அணி டாசை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சில் படு வீக்கான சென்னை அணிக்கு கொல்கத்தா அணியை ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சமாளிப்பது கடினமான ஒன்றான மாறிவிட்டது. இருந்தாலும் டாசில் தோல்வியடைந்தது மட்டும் தான் சென்னை அணி தோல்வியடைய காரணமா?

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

மிடில் ஓவர் தடுமாற்றங்கள்:

சென்னை அணிக்கு தொடர்ந்து பிரச்னையாக அமைவது மிடில் ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்புவது. அணி முழுக்க சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் முதலில் களமிறங்குபவர்களும் சேசிங்கின் போது கடைசி ஓவர்களில் விளையாடுபவர்களும் மட்டுமே பேட்டிங்கில் சோபிக்கின்றனர்.

10 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்தாலும் 11-17 ஓவர்களில் 50 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாகி விடுகிறது சென்னை அணிக்கு. அதன் பின் கடைசி ஓவரில் மொத்த பிரஷரையும் சேர்த்துவைத்து விளையாடுகின்றனர். தோனி ஃபார்மில் இருந்தும் அவருடன் சேர்ந்து பார்டனர்ஷிப் அமைக்க சரியான ஆளில்லாமல் தவிக்கிறார்.

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

2 முறை கேட்சை மிஸ் செய்த ஜடேஜா:

கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது 2வது ஓவரின் 5வது பந்தில் ஒரு கேட்சை மிஸ் செய்தார் ஜடேஜா. எதிர்பாராமல் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் இருந்தனர். ஆனால், அடுத்த பந்திலும் கேட்ச் கொடுத்தார் சுனில் நரேன். இந்த முறையும் கையில் சிக்கிய பந்தை தவறவிட்டார் ஜடேஜா. கேட்ச் தவறவிடப்பட்ட போது அவர் 6 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 32 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா வீசிய ஓவரில் விக்கெட்டை இழந்தார் நரேன். ஆனாலும் ஜடேஜா இரண்டு முறை கேட்சை விட்டது மனதளவில் சென்னை அணி வீரர்களுக்கு பதட்டத்தை அளித்திருக்கும்.

இதே போல பவுண்டரி லைனில் பந்தை பிடிக்காமல் விடுவது, 2 ரன்கள் ஓடும் வரை த்ரோவை மெதுவாக போடுவது என ஃபீல்டிங்கில் சொதப்பியது சென்னை. நேற்றைய போட்டியில் மட்டும் இல்லாமல் இந்த தொடரில் ஜடேஜா பெரிதாக தன்னை நிரூபிக்க வில்லை இருந்தும் அவர் தொடர்ந்து அணியில் இருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

கொல்கத்தாவின் சுழல் அட்டாக்:

கொல்கத்தா அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் அந்த அணியின் பலமாக நேற்று இருந்தனர். முக்கியமாக 4 ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சுனில் நரேன். அவர் சென்னை அணியின் முக்கியமான இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தொடக்கத்தில் அதிரடியை காட்டி கொண்டிருந்த ஷேன் வாட்சன் மற்றும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயுடுவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இவர் ஒரு பக்கம் கலக்க சாவ்லா மற்றும் குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கி தவித்தது சென்னை அணி.

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

ஷப்னம் கில்லின் முதல் அரைசதம்:

சென்னை அணி பேட்டிங்கின் போது 18வது ஓவரின் 5வது பந்தில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை தோனி சிக்சருக்கு அடித்தார். அங்கு பவுண்டரி லைனில் நின்றுக்கொண்டு இருந்த கில் கையில் கேட்சாகி பின் கை நழுவி பவுண்டரி லைனை தாண்டியது. அதற்கெல்லாம் சேர்த்து பேட்டிங்கில் கலக்கினார் கில்.

36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இது தான் அவரது முதல் அரைசதம். எப்போது 7வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்படும் கில் நேற்றைய போட்டியில் நித்திஷ் ராணாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் 4வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். அதிகம் அனுபவம் இல்லாத கில் சென்னை அணியின் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டுவைக்கவில்லை.

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

சொதப்பிய சென்னை பந்து வீச்சாளர்கள்:

சென்னை அணியின் மிக பெரிய பலவீனமே பௌலிங் சைட் தான். நேற்றைய போட்டியில் அது அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் எல்லா போட்டிகளிலும் தோனி அவர்களை பயன்படுத்தும் விதம் எதிரணியை குழப்பும். அதிலேயே சென்னை அணி வெற்றி பெறும். ஆனால் நேற்று தோனி எந்த வியூகமும் எடுத்தது போன்று தெரியவில்லை. பிரவோ வீசிய முதல் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் வெற்றி கைநழுவி போவது தெரிந்தும் பிரவோவை பந்து வீச அழைக்கவில்லை தோனி. 18வது ஓவரில் பிரவோ வீசிய பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பி வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

எடுபடாத தோனியின் வியூகம்: சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP