அஸ்வினை அவுட் ஆக்கிய தோனி - நிகிடி அழகான சைகை மொழி - படங்கள்!

தனக்கு தோனியும் சென்னை அணியினரும் கொடுத்த ஆதரவு பிரமிக்க வைப்பதாக நிகிடி தெரிவித்துள்ளார்.
 | 

அஸ்வினை அவுட் ஆக்கிய தோனி - நிகிடி அழகான சைகை மொழி - படங்கள்!

அஸ்வினை அவுட் ஆக்கிய தோனி - நிகிடி அழகான சைகை மொழி - படங்கள்!தனக்கு தோனியும் சென்னை அணியினரும் கொடுத்த ஆதரவு பிரமிக்க வைப்பதாக லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிக்கொண்டு இருக்கிறார் நிகிடி. நேற்று புனேவில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு நிகிடி பெரிய பங்காற்றினார். அவர் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களான கிரிஸ் கெயில் மற்றும் ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். மொத்தமாக நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய லுங்கி நிகிடி 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். 

குறிப்பாக இரண்டு முக்கிய விக்கெட்களையும் வீழ்த்த லுங்கி கேட்ட ரிவியூவ் இரண்டும் சென்னைக்கு சாதகமாக அமைந்தது. 

அஸ்வினை அவுட் ஆக்கிய தோனி - நிகிடி அழகான சைகை மொழி - படங்கள்!பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 17வது ஓவரை நிகிடி வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட அஸ்வினின் பேட்டில் பந்து உரசி தோனியின் கையில் கேட்சாக மாறியது. உடனே விக்கெட் என்று நிகிடி கத்தினார். ஆனால் அவரை தவிர மற்ற யாருமே பந்து பேட்டில் உரசியதை கவனிக்கவில்லை. அம்பையரும் அவுட் இல்லை என்று கூறிவிட்டார்.

அதேநேரத்தில், நிகிடியிடம் தோனி, தனக்கு பந்து உரசிய சத்தம் கேட்கவில்லை என்று கூறினார். ஆனால் நிகிடி மிக உறுதியாக பந்தின் சத்தம் தனக்கு கேட்டதாக கூறியதால் தோனி உடனே யோசிக்காமல் டி.ஆர்.எஸ் முறைக்கு சென்றார். அதில் அஸ்வின் அவுட் என்பது உறுதியானது. தோனிக்கு சத்தம் கேட்காதபோதும் நிகிடியை நம்பி டிஆர்எஸ் முறைக்கு சென்றதை பலரும் பாரட்டினர். அஸ்வின் டக் அவுட் ஆகி, மிகவும் சோகமாக பெவிலியன் திரும்பினார்.  

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற நிகிடி பேசும் போது, ''என்னை ஐ.பி.எல் தொடரில் ஏலத்தில் எடுப்பார்கள் என்று கூட நான் நினைக்கவில்லை. எனக்கு சென்னை அணியின் பயிற்சியாளரும், தோனியும் கொடுத்த ஆதரவு பிரமிப்பளிக்கிறது. நான் இத்தனை ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியதே இல்லை. இது எனக்கு மிக பெரிய அனுபவம். இந்த தொடரில் நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP