கிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் தோனி என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஓய்வுக்கு பின்னர் ஓவியர் ஆகப்போவதாக தெரிவித்துள்ளார்.
 | 

கிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் தோனி என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தபோவதாக தெரிவித்துள்ளார். 

'கேப்டன் கூல்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைவெளியிட்டுள்ளார். 

அதில், "சிறு வயதில் இருந்தே ஒரு சிறந்த ஓவிய கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. நான் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளேன். நான் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியபோதிலும், ஓவியம் வரைவதை விடவில்லை. நான் வரைந்த சில ஓவியங்களை உங்களிடம் காட்டுகிறேன். 

நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழுமையாக ஓவியத்தில் கவனம் செலுத்த நினைக்கிறன். எனது முதல் ஓவிய கண்காட்சி விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு சிறிது காலம் ஆகும்.. நான் வரைந்த ஓவியங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஓவியக்கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனது அனைத்து ஓவியங்களையும் பாருங்கள். அவற்றில் ஏதேனும் மாற்ற வேண்டியிருந்தால் கூறுங்கள். நான் நடத்தவுள்ள ஓவிய கண்காட்சிக்கு அனைவரும் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று பேசியுள்ளார். 

 

தோனியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சமயத்தில் தோனி இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போகிறாரா? என்றும் அவரது ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP