ஐ.பி.எல்: அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் தோனி, சி.எஸ்.கே முதலிடம்!

2018 ஐ.பி.எல் சீசனில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்கள் பட்டியலில் சென்னை அணி கேப்டன் தோனி முதலிடத்தை பிடித்துள்ளார்.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டிக்கு இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இதைவிட உற்சாகத்தை தருவது தோனியின் கேப்டன்ஷிப்பும் அணியின் வெற்றியும் தான். ஆனால், நேற்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக சென்னை தோல்வியை தழுவியது ரசிகர்களிடையே சற்று கவலையடைய வைத்துள்ளது.

இருப்பினும் இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய தோனி, சிக்ஸரில் முதலிடம் பிடித்தார். 25 பந்துகளில் 43 ரன் எடுத்த அவர், ஒரு பவுண்டரி நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதுவரை தோனி விளையாடிய ஒன்பது ஆட்டங்களில் 24 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் கெய்லை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார்.

ஐ.பி.எல்: அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் தோனி, சி.எஸ்.கே முதலிடம்!

அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள்:

வீரர்கள் அணி சிக்ஸர்
எம்.எஸ். தோனி
சென்னை 
24
கிறிஸ் கெய்ல்
பஞ்சாப் 
23
ஏபி டி வில்லியர்ஸ்
பெங்களூரு 
23
ஆண்ட்ரே ரஸ்ஸல்
கொல்கத்தா 
23
ஷான் வாட்சன்
சென்னை 
21

இது தவிர அதிக சிக்ஸர் அடித்த அணி என்ற பட்டியலிலும் தோனியின் சென்னை அணி, முதல் இடம் பிடித்துள்ளது. கொல்கத்தா அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. முதலிடத்தை பிடித்திருந்த டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. 

ஐ.பி.எல்: அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் தோனி, சி.எஸ்.கே முதலிடம்!

அதிக சிக்ஸர்களை விளாசிய அணி:

அணி சிக்ஸர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 93
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 78
டெல்லி டேர்டெவில்ஸ் 75
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 74
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 50

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP