மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல்-ல் 9-வது லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பிர், மும்பையை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார். இரு அணிகளும் தாங்கள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டிருப்பதால் இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பெற முனைப்புடன் களமிறங்கின.
 | 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53, ஏவின் லீவிஸ் 48 நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை டெல்லியின் ராகுல் தேவாதியா பிரித்தார். இதற்கு பின் விளையாடிய இஷான் கிஷான் 44 ரன் சேர்த்தார். அதன் பின் அணி வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 194 ரன் சேர்த்தது. தேவாதியா, பௌல்ட், கிறிஸ்டின் ஆகியோர் தலா 2 விக்கெட், ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய துவக்க வீரர் ஜேசன் ராயின் அதிரடியால், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 53 பந்துகளை சந்தித்த ஜேசன் ராய் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 91 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இதன் மூலம், ஐ.பி.எல்-ல் முதல் வெற்றியை டெல்லி அணி பெற்றது. மும்பைக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP