காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் தீபா கர்மாகர்

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும், நம்பிக்கை நட்சத்திரமுமான தீபா கர்மாகர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகினார்.
 | 

காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் தீபா கர்மாகர்


இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும், நம்பிக்கை நட்சத்திரமுமான தீபா கர்மாகர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகினார். 

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் குயின்ஸ்லாந்து நகரில் 2018 காமன்வெல்த் கேம்ஸ் வருகிற ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 15ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் விலகியுள்ளார். 

கடந்த ஆண்டு கர்மாகருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவரது விளையாட்டுக்க ஒரு வருடமாக அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால், இந்த போட்டியிலும் அவரலால் பங்கேற்க முடியாது என்று கர்மாகரின் பயிற்சியாளர் பீஸ்வேஸ்வர் நந்தி கூறியுள்ளார்.

"காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க கர்மாகர் இன்னும் தயாராகவில்லை. அதனால், ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் ஆசிய போட்டிக்கு இப்போது குறிவைத்துள்ளோம். அதற்குள் அவரை முழுமையாக தயார்படுத்த வேண்டும். அவர் உடற்தகுதியுடன் தான் இருக்கிறார். ஆனால், கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது" என்றும் அவர் கூறினார். 

கர்மாகர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையை 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற போது பெற்றிருந்தார். அந்த போட்டியில் அவர் நான்காவது இடத்தை பிடித்தார். அதுவே வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்மாகர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின், புனர்வாழ்வு மையத்தில் நீண்ட நாட்கள் செயல்பட்டு வந்த அவர், அதனை முடித்துக் கொண்டு தனது பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.  

2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில், ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை கர்மகர் படைத்திருந்தார். 2015ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP