தங்கம் வென்ற விவசாயி மகள்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஹீமா தாஸுக்கு பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 | 

தங்கம் வென்ற விவசாயி மகள்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஹீமா தாஸுக்கு பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்லாந்தில் நடக்கும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருககான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஹீமா தாஸ். 18 வயதாகும் இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் இந்தாண்டு ஏப்ரலில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 51.32 விநாடியில் கடந்து 6வது இடத்தைப் பிடித்தார் ஹீமா. அப்போது 20 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய சாதனையை அவர் புரிந்தார். அதன்பிறகு குவஹாத்தியில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் 51.13 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் ஹீமா

இவருக்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தங்கம் வென்ற விவசாயி மகள்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து!

அதில், "ஹீமா தாஸ் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். 

தங்கம் வென்ற விவசாயி மகள்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "தங்கம் வென்ற ஹீமாவுக்கு வாழ்த்துக்கள். இது தான் அந்த பிரிவில் இந்தியாவின் முதல் தங்கம். அசாம் மாநிலத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமையான தருணம். தற்போது ஹீமாவை ஒலிம்பிக் அழைக்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.  

மேலும் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP