ரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் 400 ரன்களுக்கு மேல் அடித்தும், 145-க்கு அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 | 

ரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்!

ரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் 400 ரன்களுக்கு மேல் அடித்தும், 145-க்கு அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

ரன்- சி.எஸ்.கே-வின் மிகப்பெரிய தூண்களான அம்பதி ராயுடு (602 ரன், 149.75 ஸ்ட்ரைக் ரேட்), ஷேன் வாட்சன் (555 ரன், 154.59 ஸ்ட்ரைக் ரேட்), எம்.எஸ். தோனி (455 ரன், 150.66 ஸ்ட்ரைக் ரேட்) ஆகியோர் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். ஒரே அணியை சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள், 400 ரன் மற்றும் 145க்கு மேலான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

ஐ.பி.எல் தொடரில் ராயுடு மற்றும் வாட்சன் அதிக ரன் அடித்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த சீசனில் தான் தோனியின் மிகப்பெரிய ஸ்கோர் அமைந்தது. மேலும், வேறெந்த அணியிலும் ஒரே வீரருக்கு மேல் 500 ரன்களை தாண்டவில்லை. 

சிக்ஸர்- 145 சிக்ஸர்களை சி.எஸ்.கே அணி விளாசியுள்ளது. ஒரு சீசனில் மற்ற அணிகளைவிட சி.எஸ்.கே-வின் அதிகபட்ச சிக்ஸர் இதுவாகும். இதன் மூலம், 2016ல் 142 சிக்ஸர்கள் அடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, சி.எஸ்.கே முந்தியது.

கொல்கத்தா (130, 2018), பஞ்சாப் (127, 2014), மும்பை (120, 2015). வாட்சன் (35 சிக்ஸர்), ராயுடு (34), தோனி (30) என மொத்தம் இவர்களால் மட்டும் 99 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. வேறெந்த அணியிலும் ஒரு வீரர்களுக்கு மேல் 30 சிக்ஸர் அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் முடிக்கப்படவில்லை.

ரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்!

அணி- இந்த சீசனில் சி.எஸ்.கே, மற்ற ஏழு அணிகளையும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது வீழ்த்தி இருந்தது. ஹைதெராபாத் அணியை, தான் எதிர்கொண்ட நான்கு போட்டிகளிலும் சி.எஸ்.கே வீழ்த்தியது. ஒரு சீசனில் எதிரணியை ஒரு அணி நான்கு முறையும் வீழ்த்தியது இதுவே முதல் முறை. 

ரன்-ரேட்- டெத் ஓவர்களில் சி.எஸ்.கே-வின் (11.64) ரன்-ரேட், இந்த சீசனில் இரண்டாவது மிகப்பெரியது ஆகும். டெல்லி டேர்டெவில்ஸ் அணி (11.65) ரன்-ரேட்டை பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும், டெத் ஓவர்களில் 44.84 சராசரியை சி.எஸ்.கே கொண்டுள்ளது. அனைத்து அணிகளை விடவும் இது சிறந்த சராசரி ஆகும். தவிர, அதிக (54) சிக்ஸர்களும் அடிக்கப்பட்டது. 

எக்கனாமி ரேட்- பவர்பிளேவில் சி.எஸ்.கே அணி பந்துவீச்சாளர்கள் எக்கனாமி ரேட் 7.91. ஹைதராபாத் அணிக்கு (7.71) பிறகு இரண்டாவது மிகப்பெரிய எக்கனாமி ரேட் இதுவாகும். சி.எஸ்.கே அணியின் நிகிடியின் எக்கனாமி ரேட் 3.77. இந்த தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும் நிகிடியின் எக்கனாமி ரெட் சிறப்பானதாக அமைந்துள்ளது.

நிகிடி பெரும்பாலும், பவர்பிளே, டெத் ஓவர்களில் தான் பந்துவீசியுள்ளார். 7 போட்டிகளில் அவர் 11 விக்கெட் வீழ்த்தி, 58 ரன்களை எடுக்கவிடாமல் தடுத்தார். 20 அல்லது அதற்கு மேல் ஓவர்கள் வீசிய வீரர்கள் மத்தியில் நிகிடியின் எக்கனாமி ரேட் (6.00) இரண்டாவது சிறந்த ரேட் ஆகும்.

ரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்!

தொடரின் இரண்டாவது பாதியில் ஜடேஜா 9 விக்கெட்கள் வீழ்த்தினார். எட்டு போட்டிகளில் பந்து வீசிய அவர் ஒரே ஒரு முறை மட்டுமே விக்கெட் எடுக்காமல் இருந்தார். முதல் பாதியில் 14 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதிலும் இரண்டு முறை தான் அவரது 4 ஓவர் கோட்டாவை நிறைவு செய்தார். முதல் 8 போட்டிகளில் அவரது எக்கனாமி ரேட் 8.21. இரண்டாவது 8 போட்டிகளில் 6.96 ஆகும்.

விருது- மற்ற அணிகளைவிட சி.எஸ்.கே அணியில் அதிக (8) வீரர்கள் விதவிதமான விருதுகளை அள்ளிச் சென்றனர். வாட்சன், ராயுடு, மூன்று மற்றும் இரண்டு விருதுகளும், பிராவோ, தோனி, பாப் டு பிளேஸிஸ், பில்லிங்ஸ், ஜடேஜா, நிகிடி தலா ஒரு விருதையும் பெற்றனர். மற்ற எந்த அணியிலும், ஐந்து வீரர்களுக்கு மேல் விருதுகளை பெறவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP