சென்னையில் ரசிகர்களை சந்திக்கின்றனர் சிஎஸ்கே வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இன்று சென்னையில் தங்களது ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.
 | 

சென்னையில் ரசிகர்களை சந்திக்கின்றனர் சிஎஸ்கே வீரர்கள்

சென்னையில் ரசிகர்களை சந்திக்கின்றனர் சிஎஸ்கே வீரர்கள்சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இன்று சென்னையில் தங்களது ரசிகர்களை சந்திக்க உள்ளனர். 

இரண்டு ஆண்டு கால தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் களமிறங்கியது. முதல் போட்டியை மும்பையில் விளையாடிய சென்னை அணி தங்களது இரண்டாவது போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடியது. 

அன்றைய தினம், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரும் அளவில் போராட்டம் நடைபெற்று வந்தது. எனவே சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட கூடாது என்று பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அன்று சென்னையில் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது மைதானத்திற்கு வெளியே நடந்த போராட்டதாலும்,  சிலர் மைதானத்திற்குள் செருப்புக்களை வீசியதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து சென்னை அணி விளையாடும் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. இவ்வாறு பல எதிர்ப்புகளை மீறி வெற்றிப்பெற்ற சென்னை அணி வீரர்கள் பல முறை தங்களால் சொந்த மைதானத்தில் விளையாட முடியாததை நினைத்து வருத்தமடைந்து இருப்பதாக கூறி வந்தனர். 

கேப்டன் தோனியும் இறுதிப்போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னையில் விளையாட முடியாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று வெற்றிக்கு பின் பேசிய தோனி, இன்று சென்னை சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்ததை அளித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP