காமன்வெல்த்: தங்கம் வென்றது ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி!

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
 | 

காமன்வெல்த்: தங்கம் வென்றது ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி!

காமன்வெல்த்: தங்கம் வென்றது ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி!

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. 

கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் அணியை தொடர்ந்து ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணியும் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இறுதிச் சுற்று போட்டியில் இந்திய அணி, நைஜீரியாவிடம் மோதியது. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. 

துவக்க போட்டியில் இந்திய வீரர் அசந்தா ஷரத் கமல் 4-11, 11-5, 11-4, 11-9 போடே அபியோடனை தோற்கடித்து இந்தியாவுக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். இரண்டாவது ஆட்டத்தில் சத்தியன் குணசேகரன் 2-0 என முன்னிலை செய்ய, மூன்றாவது போட்டியில் குணசேகரன்- ஹாமீத் தேசாய் இணைந்து 3-0 என வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை உறுதி செய்தனர். 

காமன்வெல்த் போட்டியில் இந்தியா 8 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 18 பதக்கங்களை வென்றுளள்து. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP