காமன்வெல்த் போட்டி: அரையிறுதியில் இந்திய பேட்மிண்டன் அணி

கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இந்திய கலப்பு பேட்மிண்டன் அணி, காலிறுதி போட்டியில் மலேஷியாவை இன்று எதிர்கொண்டது. இதில், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
 | 

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் அஷ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி, 2-0 என வெற்றி அடைந்து இந்தியாவுக்கு முன்னைலை கொடுத்தனர். முடிவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-12, 21-14 என்ற கணக்கில் ஜூலியன் பாலை வென்று ஆட்டத்தை முடித்து வைத்தார். 

நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். துடுப்பாட்டத்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. எதிரணியை 3-0 என்ற கணக்கில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணி மலேஷியாவை துவம்சம் செய்தது. 

ஆண்கள் ஹாக்கி போட்டியில், பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, பாகிஸ்தானிடம் மோதியது. முடிவில் போட்டி 2-2 என டிரா ஆனது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP