காமன்வெல்த் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய அணி!

காமன்வெல்த் போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
 | 

காமன்வெல்த் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய அணி!

காமன்வெல்த் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய அணி!

காமன்வெல்த் போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 

கோல்டுகோஸ்ட்டில் இன்று ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா- ஸ்காட்லாந்து பேட்மிண்டன் அணிகள் மோதின. இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை ஒயிட்வாஷ் செய்து வென்றிருந்தது. இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணியையும் 5-0 என ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால்  21-14, 21-12 என்ற நேர்செட் கணக்கில் ஜூலை மேக்பர்சனை வீழ்த்தி இந்திய அணியை 1-0 என முன்னிலை படுத்தினார். இதே போல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-18, 21-2 என கிரான் மேரிலீஸை வென்று 2-0 என இந்தியாவை முன்னிலை பெறச் செய்தார். 

பெண்கள் இரட்டையரில் அஷ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையரில் பிரணவ் சோப்ரா- சிக்கி ரெட்டி ஆகியோரும் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா 5-0 என ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது.   

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP