வந்துருங்கப்பா.. பேட்டிங் வேண்டாம்! தோனியிடம் கெஞ்சிய மகள் ஜிவா

ஐ.பி.எல் போட்டியின் போது, தந்தை தோனியை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்ட மகள் ஜிவாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

ஐ.பி.எல் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்காக தோனி கடுமையாக பாடுபட்டார். அவருக்கு ஆட்டத்தின் நடுவே முதுகில் காயம் ஏற்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் 79 ரன்கள் அடித்தார். 

தோனி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், மகள் ஜிவா அவரை மைதானத்தை விட்டுவிட்டு அவரிடம் வருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதில், ஜிவா, தோனியை கட்டி அணைக்க வேண்டும் என்றும் சொல்லி கொஞ்சி பேசியிருந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் தோனி ஷேர் செய்துள்ளார். 

முதுகு வலியால் இருந்தாலும் தோனி பேட்டிங் செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் எனது முதுகை அதிகளவில் உபயோகித்து விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலையை எனது கைகள் பார்த்துக் கொள்ளும். முதுகில் காயம் கடுமையாக இருந்தாலும் கடவுள் எனக்கு அதிக வலிமையை கொடுத்துள்ளார்" என்று கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP