சென்னை - டெல்லி மோதல்: ரன், சிக்ஸர், ஸ்டம்பிங்கில் சாதிக்க இருக்கும் தோனி!

ஐ.பி.எல் போட்டியில் இன்று நடக்க இருக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
 | 

சென்னை - டெல்லி மோதல்: ரன், சிக்ஸர், ஸ்டம்பிங்கில் சாதிக்க இருக்கும் தோனி!

சென்னை - டெல்லி மோதல்: ரன், சிக்ஸர், ஸ்டம்பிங்கில் சாதிக்க இருக்கும் தோனி!

ஐ.பி.எல் போட்டியில் இன்று நடக்க இருக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியின் ஃபெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ், 12 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. 

12 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது டெல்லி அணி. ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி, சென்னைக்கு பதிலடி கொடுக்க ஆர்வம் காட்டும். 

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் சென்னை 12 வெற்றிகளையும், டெல்லி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 

சென்னை - டெல்லி மோதல்: ரன், சிக்ஸர், ஸ்டம்பிங்கில் சாதிக்க இருக்கும் தோனி!

சென்னை - டெல்லி போட்டியின் புள்ளி விவரங்கள்:-

* டெல்லி அணி முன்னாள் கேப்டன் கவுதம் கம்பிர், இன்னும் ஒரு அரைசதம் அடித்தால், அதிக அரைசதம் அடித்த டேவிட் வார்னரை அவர் முறியடிப்பார். கம்பிர், ஐ.பி.எல்-ல் 36 அரைசதங்கள் அடித்துள்ளார். 

* இன்னும் இரண்டு சிக்ஸ் அடித்தால், ஐ.பி.எல்-ல் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி, 3ம் இடத்துக்கு தோனி முன்னேறுவார். 

* மூன்று ஸ்டம்பிங் அவுட் செய்வதன் மூலம், ஐ.பி.எல்-ல் அதிக ஸ்டம்பிங் அவுட் செய்துள்ள ராபின் உத்தப்பாவை தோனி முறியடித்துவிடுவார். 

* சிக்ஸரில் ஏபி டி வில்லியர்ஸை முந்த, சுரேஷ் ரெய்னாவுக்கு இன்னும் 6 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது. 

* தோனி இன்னும் 26 ரன்கள் அடித்தால், ஐ.பி.எல்-ல் 4000 ரன்களை என்ற மைல்கல்லை அவர் எட்டுவார். ஐ.பி.எல் போட்டியில் 4000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்தை தோனி பிடிப்பார்.

சென்னை - டெல்லி மோதல்: ரன், சிக்ஸர், ஸ்டம்பிங்கில் சாதிக்க இருக்கும் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி: ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பந்த், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் ராய், கொலின் முன்றோ, முகமது ஷமி, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, ராகுல் தேவாதியா, விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், டேனியல் கிறிஸ்டின், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மான், ட்ரெண்ட் பௌல்ட, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, சந்தீப் லாமிச்சனே, நமன் ஒஜ்ஹா, ஸயன் கோஷ், கவுதம் கம்பிர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP