சென்னை திரில் வெற்றி! மும்பையை பழி தீர்த்தது

ஐ.பி.எல் முதல் போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையை பழிதீர்த்துக்கொண்டது.
 | 

சென்னை திரில் வெற்றி! மும்பையை பழி தீர்த்தது

சென்னை திரில் வெற்றி! மும்பையை பழி தீர்த்ததுஐ.பி.எல் முதல் போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையை பழிதீர்த்துக்கொண்டது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்யும்படி மும்பையை அழைத்தது. இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் ஏவின் லீவிசும் களம் இறங்கினர். வந்த வேகத்தில் லீவிஸ் பெவிலியன் திரும்பினார். கொஞ்ச நேரத்திலேயே ரோஹித்தும் நடையைகட்டினர். இதனால், பெரிய அளவுக்கு ரன் குவிக்க முடியாமல் மும்பை திணறியது. கடைசியில் அந்த அணி, நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.

165 ரன் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சென்னைக்கு தொடக்கம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை, ஷேன் வாட்சன் 16 ரன்னும், அம்பதி ராயுடு 22 ரன்னும் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 4 ரன் மட்டுமே எடுத்தார். கேதர் ஜாதவ் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். வந்தவர்கள் எல்லாம் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

சென்னை திரில் வெற்றி! மும்பையை பழி தீர்த்தது

நம்பிக்கை நட்சத்திரமாக வந்தார் பிராவோ. 30 பந்துகளில் 68 ரன் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இதில், 7 சிக்சர்களும் அடங்கும். அதன்பிறகு அவர் அவுட் ஆகவே, சென்னை அணி வெற்றிபெறுமா என்று சந்தேகம் எழுந்தது. கடைசியில் ஜாதவ் மீண்டும் களம் கண்டார். இதனால், 19.5வது ஓவரில் 169 ரன் எடுத்து சென்னை திரில் வெற்றி பெற்றது.

2015 ஐ.பி.எல் இறுதி போட்டியில் சென்னை அணியை மும்பை வீழ்த்தியது. இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு இன்று முதன்முறையாக களம் கண்ட சென்னை அணி, தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே மும்பையை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.

சென்னையின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிராவோவுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

மும்பை - சென்னை போட்டியின் ஸ்கோர்டு கார்டு...

முழுமையான ஐ.பி.எல் செய்திகளுக்கு வருகை தாருங்கள் http://cricket.newstm.in/

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP