சென்னை: மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன.
 | 

சென்னை: மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும்,  மாதந்தோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த  வகையில் தடகளம் மற்றும் ரோல்பால் போட்டிகள் இன்று நடைபெற்றன. 

இன்று நடைபெற்ற ரோல்பால் போடடியில் 6 சிறுவர் அணியினரும், 2 சிறுமியர் அணியினரும் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், நேரு விளையாட்டரங்கின் நிர்வாக அலுவலர் சுஜாதா ஆகியோர் ரோல்பால் போட்டிகளை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாதந்திர ரோல்பால் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதன்முறை என தமிழ்நாடு ரோல்பால் சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்டீபன் டேவிட் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் பூபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

வரும் 4ஆம் தேதி, நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் நடைபெறவுள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP