காவிரி: சி.எஸ்.கே போட்டியை புறக்கணியுங்கள்- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை!

காவிரி பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்க ஐ.பி.எல் போட்டியை புறக்கணிக்க ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் யோசனை கூறியுள்ளார்.
 | 

காவிரி: சி.எஸ்.கே போட்டியை புறக்கணியுங்கள்-  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை!

காவிரி: சி.எஸ்.கே போட்டியை புறக்கணியுங்கள்-  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை!

காவிரி பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்க ஐ.பி.எல் போட்டியை புறக்கணிக்க ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் யோசனை கூறியுள்ளார். 

காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை இன்னும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த விவகாரத்தில் ஒரு யோசனையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

அதில், "காவிரி பிரச்னையில் நாம் ஒற்றுமையாக இருந்து பல வழிகளில் போராட்டம் நடத்தி வருகின்றோம். இந்த விஷயத்தில் நான் ஒரு ஆலோசனையை கூறுகின்றேன். இது பல பேருக்கு பிடிக்காது. எனினும் இதனை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்..

சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி சி.எஸ்.கே அணி முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது. 50,000 பேர் அமர்ந்து பார்க்கும் ஸ்டேடியத்தில், ஒருவர் கூட இல்லையெனில் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்படும். உலகளவில் அதனை டிவி-யில் பார்க்கப்படும். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், இதனை நாம் செய்து காட்ட முடியும். அதுவும் ஒரு சின்ன தியாகத்தின் வழியாக.. 

காவிரி: சி.எஸ்.கே போட்டியை புறக்கணியுங்கள்-  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை!

எல்ல வருடமும் ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், இந்தாண்டு அணை திறக்கப்படுமா என்பது தெரியாது. இந்த பிரச்னை தீர்க்கப்படுமா அல்லது சுயநலமிக்க அரசியல்வாதிகள் இப்பிரச்னையை தீர்த்து வைப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தற்போது இந்த பிரச்னைக்கு நாம் போராடி ஒரு தீர்வு காண வேண்டும். 

இதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு...

என்னுடைய யோசனை, ஒரே ஒரு போட்டியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, இந்த காவிரி பிரச்னையில் நமது போராட்டத்துக்கு வலு சேருங்கள் என்பது தான். 

இது விவசாயிகளின் பிரச்னை என்று பார்க்க வேண்டாம். இது தினம் தினம் நடக்கும் ஒரு பிரச்னை. உணவு உற்பத்தியின்  பிரச்னை. தமிழ்நாட்டின் பிரதான உணவு அரிசி.

இது தமிழர்களின் பிரச்னை என்றும் பார்க்காமல், நாட்டில் வாழும் அனைவரது பிரச்னையாக கருதப்பட வேண்டும். நீங்களும் எங்களுடன் துணையாக நிற்க வேண்டும். இது மொழி பிரச்னை கிடையாது. இது வாழ்க்கை! நமக்கு உணவு வழங்கும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லையெனில் அது உணவு உற்பத்தி, வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை பாதிக்கும். 

என்னுடைய கோரிக்கை எல்லாம், ஒரே ஒரு போட்டிக்கு நீங்கள் மைதானத்துக்கு செல்ல வேண்டாம். டிவி-யில் போட்டியை பாருங்கள். 50,000 பேரின் தியாகத்தால், வாழ்நாள் முழுக்க 7 கோடி மக்கள் இதனால் ஆதாயம் அடைவார்கள்.

நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.. இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இதன் காரணமாக, நம்மளுடைய ஸ்டார் வீரர்களுக்கு சம்பளத்துக்கோ அல்லது டிவி-யின் வருவாயிலோ எந்த ஒரு பிரச்னையும் வராது. இதனை சி.எஸ்.கே-வும் ஆதரிக்கும். ஏனென்னில் அவர்கள் நமக்காகவும் நம் மாநிலத்துக்காகவும் பிரதிநிதித்துவம் அளிக்கிறார்கள். 

இதன் மூலம், மத்திய அரசு, நீதிபதிகள் மற்றும் இந்த உலகத்தை நம் மீது கவனம் செலுத்த வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP