கிக் வாலிபால் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிக் வாலிபால் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது இந்திய ரெகு அணி.
 | 

கிக் வாலிபால் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிக் வாலிபால் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது இந்திய ரெகு அணி. 

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கிக் வாலிபால் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் தாய்லாந்துடன், இந்திய ரெகு அணி மோதியது. 

இதில் தாய்லாந்திடம் 0-2 என்ற கணக்கில் இந்தியா ரெகு அணி தோல்வி அடைந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்த அணிக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. 

இந்திய அணி, ஈரானை 21-16, 19-21, 21- 17 என்ற கணக்கில் துவக்க போட்டியில் வீழ்த்தியது. இருந்த போதும், பி பிரிவில் இந்தோனேசியாவிடம் 0-3 என வீழ்ந்தது. எனினும் அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம் கண்டு, வெண்கலம் பெற்றுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP