பெங்களூரு என்னை ஏமாற்றிவிட்டது- கிறிஸ் கெய்ல் சாடல்

ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்காக தன்னை மீட்டெடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
 | 

பெங்களூரு என்னை ஏமாற்றிவிட்டது- கிறிஸ் கெய்ல் சாடல்

பெங்களூரு என்னை ஏமாற்றிவிட்டது- கிறிஸ் கெய்ல் சாடல்

ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்காக தன்னை மீட்டெடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

11-வது சீசனுக்கான ஐ.பி.எல் போட்டி ஒட்டுமொத்தமாக புதிய மாற்றுத்துடனே களமிறங்கியிருக்கிறது. அதில் மிகப்பெரிய மாற்றமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கிறிஸ் கெய்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சென்றது தான். ஆனால் இந்த மாற்றம் பஞ்சாப் அணிக்கு பெரிய ஆதாயமாக அமைந்தது. இதன் காரணமாக, தன்னை ஏலத்தில் எடுத்து ஐ.பி.எல்-ஐ சேவாக் காப்பாற்றிவிட்டதாக கெய்ல் கூறி இருந்தார். 

முன்னதாக ஐ.பி.எல் ஏலத்தின் முதல் நாளில் கெய்லை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை. இரண்டாவது நாளன்று அடிப்படை தொகையான ரூ.2 கோடி கொடுத்து கெய்லை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது, அந்த அணிக்கு ஜாக்பாட்டாக அமைந்துவிட்டது. கடந்த இரண்டு சீசன்களில் கெய்லின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் பெங்களூரு அணி கெய்லை தக்கவைத்துக் கொள்ளவில்லை. 

தற்போது அது குறித்து பேசிய கெய்ல், "இது அவர்களுக்கு தான்இழப்பு. எனக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் என்னை அழைத்து, ஏலத்தில் ரைட் டு மேட்ச் முறைப்படி வாங்கிக் கொள்வதாக கூறினர். ஆனால் அதன் பிறகு அவர்கள் என்னை அழைக்கவில்லை. அப்போது தான் தெரிந்து கொண்டேன், அவர்களுக்கு நான் வேண்டாம் என்று. நல்லது தான். நான் யாரிடம் வேண்டுமென்றாலும் மோதுவேன். சி.பி.எல் மற்றும் பி.பி.எல் போட்டி சிறப்பாக அமைந்தது. அங்கு இரண்டு சதம் அடித்தேன். 

முதலில் ஏலத்தில் என்னை எடுக்காதது ஆச்சரியமாக இருந்தது. நான் மீண்டும் மூடிய கதவின் வாசலுக்கு முன் சென்று நிற்க விரும்பவில்லை. அது நடக்கும் என்றும் நினைக்கவில்லை. அதுவும் நல்லது தான். அதில் இருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP