எல்லாம் இருக்கு! ராசியில்லை... புலம்பும் ரகானே ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நன்றாக விளையாடியும் 2வது முறையாக ரகானேவால் அணியை வெற்றி பெறவைக்க முடியவில்லை என புலம்புகின்றனர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்கள்.
 | 

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் கோட்டை விட்டார். 

ஐபிஎல் போட்டியில் இரண்டு முறை தொடக்க வீரராக களமிறங்கி, 50 ரன்களுக்கு மேல் எடுத்தும் ராகனேவால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைக்கமுடியவில்லை என்பது ராகனே ரசிகர்களுக்கு பெரும் சோகம். கேப்டன் பதவி இருக்கு, 50 ரன்களுக்கு மேல் எடுக்கும் திறமை இருக்கு, அவுட் ஆகாமல் நின்று விளையாடும் திறமை இருக்கு ஆனால் ராசியில்லை என புலம்புகின்றனர் ராஜஸ்தான் ராக்ஸ் ரசிகர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP