தகவல் அறியும் சட்டத்திற்கு கீழ் பிசிசிஐ: சட்ட ஆணையம் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பையும், அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 | 

தகவல் அறியும் சட்டத்திற்கு கீழ் பிசிசிஐ: சட்ட ஆணையம் பரிந்துரை

தகவல் அறியும் சட்டத்திற்கு கீழ் பிசிசிஐ: சட்ட ஆணையம் பரிந்துரைஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பையும், அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆய்வு செய்ய மத்திய சட்ட ஆணையத்துக்கு அறிவுறுத்தி இருந்தது. 

இதையடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஆய்வு செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம்  தனது 128 பக்க பரிந்துரைகளை அளித்துள்ளது.

எனவே, 90 ஆண்டு பழமையான பிசிசிஐ அமைப்பை அரசு அமைப்பாக அறிவிக்க வேண்டும். அதை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். பிசிசிஐ அமைப்புகள், மாநில கிளைகள், தலைவர், உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவரும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் பிறகு இந்திய அணியின் வீரர்கள் தேர்வு விவகாரம், பங்கேற்கும் போட்டிகள், வருமானம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி உலக அளவில் விளையாடும் பிசிசிஐ அமைப்பு 10 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP