ரஞ்சி கோப்பை போட்டியில் பீகார் பங்கேற்க பிசிசிஐ அனுமதி

சௌரவ் கங்குலி தலைமையிலான பிசிசிஐ தொழிநுட்ப குழு, ரஞ்சி கோப்பை போட்டியில் பீகாரை சேர்க்க ஒருமனதாக சம்மதித்துள்ளது.
 | 

தொழிநுட்ப குழுவின் கூட்டத்திற்கு பிறகு இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை:

"ரஞ்சி ட்ராஃபி போட்டியில் பீகார் அணி விளையாடுவதற்கு பிசிசிஐ-ன் தொழிநுட்ப குழு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவின் இணங்குதலுக்கேற்ப, ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்களும் ரஞ்சி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை பிசிசிஐ-ன் பொதுக் குழுவிடம் சேர்க்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

2004ம் ஆண்டு பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதிப்பதற்கு முன், சபா கரீம் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பீகார் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளனர். தடைக்கு பிறகு, கரீம் பெங்கால அணிக்கும், தோனி ஜார்கண்ட் அணிக்கும் மாறினர். 

2013ம் ஆண்டு நடந்த சூதாட்ட வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான ஆதித்யா வர்மா, பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராவார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP