ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!

நேற்று நடைபெற்ற ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 | 

ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!

நேற்று நடைபெற்ற ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் செவில்லாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

போட்டியின் ஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடிய பார்சிலோனா, 14வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. கோல்கீப்பர் சில்லிசென் அடித்த பந்தை, வாங்கிய குட்டினோ, அதை சுவாரஸ்சுக்கு பாஸ் செய்ய, முதல் கோலை அவர் அடித்தார். 31வது நிமிடத்தில், லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க, 40வது நிமிடத்தில் சுவாரஸ் மீண்டும் கோல் அடித்தார். 

3-0 என முன்னிலை பெற்ற நிலையில், முதல் பாதி முடிந்தது. அதன்பின், 52வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா கோல் அடித்தார். 33 வயதான இனியெஸ்டா, பார்சிலோனாவுக்காக விளையாடும் கடைசி போட்டி இதுதான் என கூறப்படும் நிலையில், அவர் கோல் அடித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பின்னர், சிறப்பாக விளையாடிய குட்டினோ, 69வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலக்கினார். 5-0 என அட்டகாசமான வெற்றி பெற்றது பார்சிலோனா. 

தொடர்ச்சியாக பார்சிலோனா வெல்லும் 4வது ஸ்பானிஷ் கோப்பை இதுவாகும். முன்னதாக இந்த மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து காலிறுதி போட்டியில், இத்தாலி நாட்டை சேர்ந்த ரோமாவுடன் பார்சிலோனா தோற்றது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வெற்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து லீக் போட்டியான லா லிகாவை பார்சிலோனா வெல்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. சரித்திரத்தில் முதன்முறையாக, ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அந்த கோப்பையை பார்சிலோனா வெல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP