ஆப்கானிஸ்தானுடன் ஒருநாள் போட்டிக்கு பதில் டி20-ல் விளையாடுகிறது வங்கதேசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பதில் டி20 போட்டிகளில் வங்கதேசம் பங்கேற்க இருக்கிறது.
 | 

வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால். 2020ம் ஆண்டு டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒருநாள் தொடருக்கு பதிலாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வங்கதேசம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மிர்பூரில் நடந்த கூட்டத்தில், டெஹ்ராடூனில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச விளையாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருப்பதால், டேராடூன் தங்களுக்கு சௌகரியமான இடமாக இருக்கும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. தவிர, டேராடூன் இடத்தை தவிர வங்கதேசத்திற்கு சௌகரியமான மற்ற இடங்கள் முன்கூட்டியே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

"ஐசிசி-ன் உலக டி20 போட்டி நடக்க உள்ளது. ஆனால், நாங்கள் போதுமான அளவு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்" என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்தார்.    

சமீபத்தில் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ம் தேதி தொடங்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்க இருக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP