இந்தியா கைவிட்டதால் இலங்கையுடன் கைகோர்த்த ஆஸ்திரேலியா!

பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததால், இலங்கையோடு பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது ஆஸ்திரேலியா.
 | 

இந்தியா கைவிட்டதால் இலங்கையுடன் கைகோர்த்த ஆஸ்திரேலியா!

இந்தியா கைவிட்டதால் இலங்கையுடன் கைகோர்த்த ஆஸ்திரேலியா!

பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததால், இலங்கையோடு பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது ஆஸ்திரேலியா. 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, கடந்த சில வருடங்களாக அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பிங்க் நிற பந்துகளில் விளையாடும் கலாச்சாரத்தை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளிடமும் திணித்து வந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்தியாவிடமும் அதனை திணிக்க பார்த்தது. ஆனால், சிவப்பு நிற பந்துகளில் விளையாடும் தங்களது கலாச்சாரத்தில் இருந்து மாற முடியாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியது. இதனால் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை முதன்முறையாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவுக்காக ரத்து செய்தது. 

இந்த நிலையில், இலங்கை அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பங்கேற்க இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிரிஸ்பேனில், இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் பிங்க் நிற பந்துகளை எதிர்கொள்ள இருக்கின்றன. 

2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா, அடிலெய்டில் நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் நிற பந்தில் முதன்முறையாக விளையாடியாது. அதில் ஒட்டுமொத்த போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. இந்தியாவை தவிர, வங்கதேச அணியும் பகலிரவு ஆட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP