ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 50 பதக்கத்துடன் டைட்டிலை கைப்பற்றியது இந்தியா

தென் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 50 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.
 | 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 50 பதக்கத்துடன் டைட்டிலை கைப்பற்றியது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 50 பதக்கத்துடன் டைட்டிலை கைப்பற்றியது இந்தியா

தென் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 50 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது. 

இலங்கை தலைநகர் கொழும்புவில், 3-வது தென் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நேற்றைய கடைசி நாளில் இந்தியா, 20 தங்கம், 22 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடம் பிடித்தது. இலங்கை இரண்டாவது மற்றும் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. வங்கதேசம், மாலத்தீவு, நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளும் இப்போட்டியில் பங்கேற்றிருந்தன.

பதக்கம் வென்ற இந்தியர்களின் பட்டியல்:-

புனிதா ராமசாமி (தங்கம், நீளம் தாண்டுதல், 5.95மீ), அஜய் (தங்கம், வட்டு எறிதல், 50.11மீ), ஆஷிஷ் பலோதியா (வெண்கலம், வட்டு எறிதல், 46.52மீ), பிராஜியன் சாஹு (வெள்ளி, 100மீ தடை தாண்டல், 14.98 நொடி), சைத்ராலி குஜார் (வெள்ளி, 100மீ, 12.24 நொடி), சுபா வெங்கடேசன் (வெள்ளி, 400மீ, 55.18 நொடி), ராச்னா குஜார் (வெள்ளி, 400மீ, 55.70 நொடி), பூனம் சோனுனே (வெள்ளி, 1500மீ, 4:36.65), அபிகைல் ஆரோக்கியநாதன் (வெள்ளி, 400மீ தடை தாண்டல், 1:02.45 நொடி), அபிநயா சுதாகரா ஷெட்டி (வெண்கலம்- நீளம் தாண்டுதல், 1.69மீ; வெள்ளி- 4x400m).

ஆஷிஷ் பலோதியா (தங்கம், பந்து எறிதல், 18.53மீ), சாஹிப் சிங் (வெள்ளி, பந்து எறிதல், 17.75மீ), குர்ஜீத் சிங் (வெள்ளி, உயரம் தாண்டுதல், 2.00மீ), ரிஷாப் ரிஷிவார் (வெள்ளி, நீளம் தண்டல், 7.43மீ), குணால் சவுத்ரி (வெள்ளி, 110மீ தடை தாண்டல், 14.50 நொடி), முகமது பியாஸ் (வெள்ளி, 11மீ தடை தாண்டல், 14.55 நொடி), ப்ரஜிவால் ரவி (தங்கம், 100மீ, 10.81 நொடி), ஆகாஷ் குமார் (வெள்ளி, 100மீ, 10.89 நொடி), அங்கித் (தங்கம், 1500மீ, 3:51.52), தவள் மகேஷ் (வெள்ளி, 4x400மீ, 53.35 நொடி), நிதின் எஸ். பாலகுமார் (வெள்ளி, 200மீ, 21.63 நொடி), அல்காஷ் குமார் (வெண்கலம், 200மீ, 21.86 நிமிடம்).

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP