அர்பிந்தர், ஸ்வப்னா அசத்தல்; இந்தியாவுக்கு 11 தங்கப் பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.
 | 

அர்பிந்தர், ஸ்வப்னா அசத்தல்; இந்தியாவுக்கு 11 தங்கப் பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஹெப்டத்லான் நீளம் தாண்டுதலில், இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.  

ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில், இந்தியாவின் அர்பிந்தர் சிங் (16.77மீ) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 48 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அர்பிந்தர் பெற்றார். 1970ம் ஆண்டு இந்தியாவின் மொஹிந்தர் சிங் (16.11மீ), ட்ரிபிள் ஜம்ப்பில் தங்கம் வென்றிருந்தார். 

இதன் மூலம், இந்தியாவுக்கு ஒட்டுமொத்தமாக 11 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலத்துடன் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP