பனிச்சறுக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த ஆன்சல் தாகூர்

பனிச்சறுக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த ஆன்சல் தாகூர்
 | 

பனிச்சறுக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த ஆன்சல் தாகூர்


துருக்கியில் சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு அல்பின் எஜ்தெர் 3200 கோப்பைக்கான பனிச்சறுக்கு போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மணலியைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஆன்சல் தாகூர்(21) கலந்து கொண்டார். ஸ்லளோம் ரேஸ் பிரிவில் போட்டியிட்ட அவர், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், பனிச்சறுக்கு போட்டியில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை என்ற பெருமையை ஆன்சல் தாகூர் பெற்றுள்ளார். 

இது குறித்து ஆன்சல் தாகூர், "எதிர்பார்க்காத ஒன்று, கடைசியில் இன்று நடந்துள்ளது. என்னுடைய முதல் சர்வதேச பதக்கம்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பனிச்சறுக்கு போட்டியை தனது தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்ட ஆன்சல் தாகூர், பின் ஒலிம்பிக் வீராங்கனை ஹிரா லால் அவரை மேலும் மெருகேற்றினார்.


ஆன்சல் தாகூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP