ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் அமித் பங்கல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல்.
 | 

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் அமித் பங்கல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவருக்கான லைட் ஃபிளை குத்துச்சண்டை 49 எடைப் பிரிவு காலிறுதி  போட்டியில், இந்தியாவின் அமித் பங்கல் 5-0 என வடகொரியாவின் கிம் ஜ்யேஓங்கை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை அமித் பங்கல் உறுதி செய்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலத்துடன் மொத்தம் 50 பதக்கங்களை பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP