கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகரானார் ஆல்-ரவுண்டர் அபிஷேக் நாயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக ஆல்-ரவுண்டர் அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. கொல்கத்தா தனது அடுத்த போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அணியின் ஆலோசகராக இந்தியாவின் ஆல்-ரவுண்டர் அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இவர் பிரபலமில்லாமல் இருந்தாலும், அவரது ஆலோசனை திறனை கண்டு ஈர்க்கப்பட்ட கொல்கத்தா அவரை தேர்ந்தெடுத்துள்ளது. 

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக், மும்பை அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் போட்டியில் 8 ஆண்டுகளில் நான்கு அணிகளில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் இந்தியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அவர் பங்கேற்று இருந்தார்.

இந்திய அணிக்காக நாயர் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 672 ரன் எடுத்துள்ளார். 2009ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் நாயர் அறிமுகமானார். இந்த தொடருக்கு பின் இந்திய அணியில் அவர் தற்போது வரை இடம் பெறவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP