சேப்பாக்கத்தில் செல்போனுக்கு அனுமதி- சி.எஸ்.கே

சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியின் போது மைதானத்துக்கு மொபைல் போன்களை கொண்டு செல்லலாம் என்று சி.எஸ்.கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 | 

சேப்பாக்கத்தில் செல்போனுக்கு அனுமதி- சி.எஸ்.கே

சேப்பாக்கத்தில் செல்போனுக்கு அனுமதி- சி.எஸ்.கே

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியின் போது மைதானத்துக்கு மொபைல் போன்களை கொண்டு செல்லலாம் என்று சி.எஸ்.கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது, இதனால் தமிழக இளைஞர்களின் போராட்டம் திசை திருப்பப்படும் என ஐ.பி.எல்-க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. 

இந்த சமயத்தில் மைதானத்தில் பேனர்கள் மற்றும் கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பல கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்திருந்தது. அதில், "முறையான பரிசோதனை பெற்றே உள்ளே அனுமதிக்கப்படுவர். தேசியக்கொடிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்துகொள்ளக்கூடாது. செல்போன், பைகள், பட்டாசு, பைனாகுலர், கார் சாவிகள், கண்ணாடி பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை உள்ளே கொண்டுவரக்கூடாது. யாரையும் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக்கூடாது. விதிகளை மீறி நடந்துகொண்டாலோ, மைதானத்தில் பொருட்களை வீசினாலோ கைது செய்யப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியை காண வரும் ரசிகர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி அளித்துள்ளது சி.எஸ்.கே. இது குறித்து சி.எஸ்.கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP