வயது பெரிய தடையல்ல: மேரி கோம்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற, வெற்றிபெற மேரிகோம் தன்னுடைய வயது பெரிய தடையல்ல என்று தெரிவித்துள்ளார்.
 | 

வயது பெரிய தடையல்ல: மேரி கோம்

வயது பெரிய தடையல்ல: மேரி கோம்காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் தன்னுடைய வயது பெரிய தடையல்ல என்று தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடந்த 21வது காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான லைட் பிளை வெயிட் பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர் காமன்வெல்த் போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

தயாகம் திரும்பி மேரிகோம் செய்தியாளர்களிடம் பேசும்போது, நான் பதக்கம் வென்றிருந்தாலும் அனைவரும் எனது வயது குறித்து தான் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை வயது பெரிய விஷயமல்ல. உரிய பயிற்சிகள் எடுத்து சிறப்பாக செயல்படுவது மட்டும்தான் என் முன் இருக்கும் சவால். 

நான் ஓய்வு பெறப்போகிறேன் என்று வந்த தகவல் வெறும் வதந்தியே. நான் ஒருபோதும் ஓய்வு பெறுவது குறித்து பேசியது இல்லை. எனக்கு இது போன்ற தகவல் பரப்பப்படுகின்றது என்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. எனது அடுத்த இலக்கு ஆசிய போட்டி, உலக சாம்பியன்ஷிப் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான் என்று தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP