வயது வெறும் நம்பர் மட்டும் தான்: தோனி

வயது வெறும் நம்பர் மட்டும் தான், உடற்தகுதி தான் முக்கியம் என்று நேற்றைய வெற்றிக்கு பின் தோனி தெரிவித்தார்.
 | 

வயது வெறும் நம்பர் மட்டும் தான்: தோனி

வயது வெறும் நம்பர் மட்டும் தான், உடற்தகுதி தான் முக்கியம் என்று நேற்றைய வெற்றிக்கு பின் தோனி கூறினார். 

மும்பையில் நடந்த சென்னை மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை வென்றது. 

வெற்றிக்கு பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, "இறுதிப்போட்டிக்கு வந்த பிறகு அனைவருக்கும் அவர்களுக்கான கடமை என்ன என்பது தெரியும். மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் போட்டியை கடினமாக உணர்ந்தால், அடுத்ததாக களம் இறங்குபவர்களுக்கும் போட்டி கடினமாக தான் இருக்கும். ரஷித் போலவே புவனேஷ்வர் குமாரும் கடினமான பவுளர்தான். அவர்களிடம் ஒரு பவுளர் மட்டும் அல்ல, ஆட்டத்தை மாற்றி அழுத்தத்தை கொடுக்க கூடிய பல பவுளர்கள் அவர்களிடம் உள்ளனர். எனவே இன்று பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது. எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம். 

வயது வெறும் நம்பர் மட்டும் தான்: தோனி

பிரவோ எப்போதும் பேட்டிங்கிற்கு தயாராக தான் இருப்பார். அவரை முன்னறே களமிறக்கும் திட்டத்தை நாங்கள் வைத்திருக்கவில்லை.

நாம் வயதை பற்றி நிறைய பேசுகிறோம். வயதைவிட உடற்தகுதிதான் முக்கியம். ராயுடுவுக்கு 33 வயது ஆகிறது. அவர் உடற்தகுதியில் பிட்டாக இருக்கிறார். அவர் பீல்டிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவர் எப்போதும் எனக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்டதில்லை. கேப்டன்களை பொறுத்தவரை பீல்டில் வேகமாக இருக்கும் வீரர்களையே எதிர்பார்ப்பார்கள். நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள் என்பது முக்கியமில்ல. மேலும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குறை இருக்கும். அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாட்சன் போன்ற மூத்த வீரர்கள் பீல்டிங் செய்யும்போது, ஒரு ரன்னைத் தடுப்பதற்காக டைவ் அடிக்க வேண்டியதிருந்தால், அதைத் தவிர்க்க சொல்லிவிடுவோம். காரணம், அதன்மூலம் அவருக்கு காயம்கூட ஏற்படலாம். பிராவோ, வாட்சன் போன்ற முக்கியமான பேட்ஸ்மேன்கள் காயத்தில் சிக்கிக்கொண்டால், அவர்களுக்கு மாற்றான காம்பினேஷனை மீண்டும் உருவாக்குவது கடினம்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP