ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்?!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்?!

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்?!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. ஜூன் மாதம் தொடங்க இருக்கும் இப்போட்டியில், கேப்டன் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின், இங்கிலாந்துக்கு இந்தியா செல்கிறது. இதனால் இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விராட் விளையாடுகிறார். இதன் காரணமாக அஜின்க்யா ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில், விராட்டுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தவிர, ஆப்கானிஸ்தானுக்கு பின் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாட இருக்கிறது. கவுன்டியில் விளையாடுவதால், டி20 போட்டியிலும் விராட் விளையாட போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம். 

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்?!

தற்போது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷ்ரேயஸ் ஐயர், சிறந்த ஃபார்மில் இருக்கிறார். கம்பிர் விலகியதால், கேப்டன்ஷிப்பிலும் அசத்தி வருகிறார். 10 போட்டிகளில் 351 ரன் அடித்திருக்கும் ஷ்ரேயாஸின் சராசரி 50.14, ஸ்ட்ரைக் ரேட் 149.36 ஆக உள்ளது.  

விராட், இங்கிலாந்து செல்லும் நேரம், கவுன்டியில் ஏற்கனவே பங்கேற்றிருந்த புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா, நாடு திரும்புகின்றனர். மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக விஜய் ஷங்கரை அணியில் இணைக்கப்படுவது குறித்தும் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP